internet

img

டெலிகிராமில் புதிய பிரீமியம் கட்டண சேவை அறிமுகம்!  

டெலிகிராம் புதிதாக பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது.  

உலகளவில் அதிக எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்பட்ட டாப் 5 செயலிகளில் டெலிகிராமும் ஒன்று. டெலிகிராமை உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.  டெலிகிராம் தற்போது புதிய பிரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பிரீமியம் சேவையை பெற, மாதம் ஒன்றுக்கு 4.99 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.390 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரீமியம் சேவையில் இணையும் சந்தாதாரர்கள், வழக்கமான சேவையை விட இரு மடங்கு அதிகமான சேவையை பெற முடியும். அதன்படி, பிரீமியம் சந்தாதாரர்கள், நீண்ட பயோடேட்டா உடன் இணைப்பில், வழக்கமான 3 கணக்குகளில் பதிலாக 4 கணக்குகளை இணைத்து கொள்ளலாம்.

மேலும் 4ஜிபி(GB) வரையிலான வீடியோ அல்லது கோப்புகளை அனுப்ப இயலும். இலவச பதிப்பில், 2ஜிபி(GB) அளவுள்ள ஆவணங்கள் மட்டுமே அனுப்ப இயலும்.

பிரத்யேகமான ஸ்டிக்கர்கள், வேகமான தரவிறக்க வசதி உள்பட பல வசதிகள் கிடைக்கும். வாய்ஸை டெக்ஸ்டாக மாற்றும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சேவை மூலம் இலவச பதிப்பை விட, பிரீமியம் சந்தாதாரர்களுக்கு நெட்வொர்க் இணைய வேகத்திற்கு ஏற்ப, அதிவிரைவில் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முதற்கட்டமாக இந்த சேவை ஐஓஎஸ்(IOS) பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இதற்கான அப்டேட் இன்னும் விடப்படவில்லை.

விரைவில் இந்த பிரீமியம் சேவையை அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.